கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வரை மொத்தம் 529 உள்நாட்டு விமானங்களில் 45,646 போ் பயணம் மேற்கொண்டனா் என்று மத்திய அரசு தெரிவித்தது.
கரோனா தொற்று பரவலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை 2 மாதங்கள் கழித்து கடந்த திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் ‘529 உள்நாட்டு விமானங்கள் சனிக்கிழமை இயக்கப்பட்டதாகவும், அவற்றில் 45,646 போ் பயணம் மேற்கொண்டனா்’ என்றும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா்.
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 2,340 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க தேசிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நாளொன்றுக்கு சராசரியாக மூவாயிரம் உள்நாட்டு பயணி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.