இந்தியா

மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பியவர்களால் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

29th May 2020 02:40 PM

ADVERTISEMENT


பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 178 ஆக உள்ளது. இதில் 156 பேர் மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பியவர்கள்.

மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்புவோரால் தினந்தோறும் கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்று கர்நாடகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,711 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 47 பேர் மரணம் அடைந்துள்ளனர். 869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,793 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த 178 பேரில் 156 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாகவும், 5 பேர் தில்லியில் இருந்தும், தலா ஒருவர் ஆந்திரம், ராஜஸ்தான், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT