இந்தியா

சூரத்தில் இருந்து சிவானுக்குச் செல்ல 9 நாள்கள் ஆனதா? ரயில்வே விளக்கம்

29th May 2020 04:52 PM

ADVERTISEMENT


சூரத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ரயில் 9 நாள்கள் பயணித்து பிகார் மாநிலம் சிவான் பகுதிக்குச் சென்றடைந்ததாக வரும் தகவல்கள் பொய் என்று இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

சூரத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் புறப்பட்ட சிறப்பு ரயில் 9 நாள்கள் பயணித்து பிகார் மாநிலம் சிவானுக்குச் சென்றடைந்ததாகவும், அதனால்தான் அந்த ரயிலில் பயணித்த சில பயணிகள் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், சூரத்தில் இருந்து சிவான் பகுதிக்குச் செல்ல 9 நாள்கள் ஆனதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. அந்த ரயில் வெறும் இரண்டு நாள்களில் சிவான் பகுதிக்குச் சென்றடைந்துள்ளது.

இதுவரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 3840 ரயில்களில் வெறும் 4 ரயில்கள் மட்டுமே அதிகபட்சமாக 72 மணி நேரம் பயணித்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைந்தது.

ADVERTISEMENT

ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகினற்ன. கரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும் இந்தப் பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Tags : train railway
ADVERTISEMENT
ADVERTISEMENT