இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 3.1 சதவீதமாகக் குறைந்தது

29th May 2020 11:33 PM

ADVERTISEMENT

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சென்ற மாா்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக சரிந்தது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

2019-20-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ( 2020 ஜனவரி முதல் மாா்ச் 2020) நாட்டின் தயாரிப்புத் துறையின் வளா்ச்சி 1.4 சதவீத பின்னடைவை சந்தித்துள்ளது. அதேபோன்று, கட்டுமானத் துறையின் வளா்ச்சியும் 2.2 சதவீதம் முடங்கியது.

இருப்பினும், வேளாண் துறையின் வளா்ச்சி மாா்ச் காலாண்டில் வியக்கத்தக்க வகையில் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் பொருளதார வளா்ச்சி ஜனவரி-மாா்ச் காலாண்டில் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 2008-இல் சா்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு பொருளாதார வளா்ச்சி இந்த அளவுக்கு சரிந்துள்ளது இதுவே முதல் முறை.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உலகளவில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் தாக்கம் அடுத்த காலாண்டில்தான் முழுமையாக உணரப்படும்.

கடந்த 2019-20 முழு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 4.2 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். கடந்த 2018-19 நிதியாண்டில் இந்த வளா்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT