இந்தியா

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்

29th May 2020 03:55 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.  

அஜித் ஜோகி கடந்த 10 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவரது மகன் அமித் ஜோகி தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை உறுதி செய்துள்ளார். நாளை(சனிக்கிழமை) தங்களது சொந்த ஊரான கோரேலாவில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

கடந்த 2000 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக அஜித் ஜோகி பொறுப்பேற்றார். 2000-2003  காலகட்டத்தில் சத்தீஸ்கர் முதல்வராக இருந்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக ராய்ப்பூர் ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி 1981-85 காலகட்டத்தில் இந்தூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். 

கடந்த 2016ல் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் அவர், 'ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்' என்ற தனிக்கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Tags : Ajit Jogi
ADVERTISEMENT
ADVERTISEMENT