இந்தியா

ராஜஸ்தான் மற்றும் அசாமில் கரோனா பாதிப்பு நிலவரம்

29th May 2020 12:49 PM

ADVERTISEMENT

 

வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை ராஜஸ்தான் மற்றும் அசாம் மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான்

கரோனா தொற்றும் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்குப் புதிதாக நோய்த் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து 8,158 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3,121 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். 4,289 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அசாம்

புதிதாக 24 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில் அசாம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு 880 ஆக உயர்ந்துள்ள என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இதில், 770 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 103 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 86 ஆயிரத்து 340 பேருக்கு சோதனை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT