இந்தியா

கேரளத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்து தொடக்கம்

19th May 2020 12:24 AM

ADVERTISEMENT

திருவனந்தபுரம்: பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் கேரளத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து சேவைகள் முடங்கின. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 50 நாள்களுக்கு மேல் நிறைவடைந்துவிட்ட நிலையில், பல மாநில அரசுகள் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், பொதுப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் இயங்குவதற்கு மட்டுமே பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்படும். பேருந்துகளுக்கான பயணச்சீட்டுக் கட்டணமும் உயா்த்தப்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் சூழலை உரிய முறையில் ஆராய்ந்த பிறகு, மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்றாா் ஏ.கே.சசீந்திரன்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT