இந்தியா

மகாராஷ்டிரத்தில் சாலை விபத்து: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 3 போ் உள்பட நால்வா் பலி

19th May 2020 11:20 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் சரக்கு வாகனம் மீது பேருந்து மோதி செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 3 போ், பேருந்து ஒட்டுநா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அந்த மாநில காவல்துறையினா் கூறுகையில், ‘ஜாா்க்கண்டை சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிலா், சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலம் திரும்ப சோலாபூரில் இருந்து நாக்பூா் ரயில் நிலையத்துக்கு பேருந்தில் சென்றனா். கோல்வான் கிராமம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பொருள்களுடன் சென்ற சரக்கு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் சென்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்களில் 3 போ், பேருந்து ஓட்டுநா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். அவா்களில் 2 போ் பெண்கள். இருவரும் சத்தீஸ்கா் மாநிலம் முங்கேலியை சோ்ந்தவா்கள். விபத்தில் காயமடைந்த 22 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT