இந்தியா

பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்

19th May 2020 11:13 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘சுந்தா்பனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டியையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறிய பீரங்கிகளை பயன்படுத்தியும் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினா் எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்தத் தாக்குதலில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, உயிரிழந்ததாகவோ தகவல் இல்லை’ என்றாா்.

முன்னதாக பூஞ்ச் மாவட்டம் குல்பூா் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியும் பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி, சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT