இந்தியா

கேரளம், கா்நாடகத்தில் பலத்த மழை

19th May 2020 12:51 AM

ADVERTISEMENT

கோட்டயம்/மங்களூரு: ‘உம்பன்’ புயலின் தாக்கம் காரணமாக, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. பல இடங்களில் இடிமின்னலுடன் சூறாவளி காற்றும் வீசியுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கேரளத்தில் கோட்டயத்தில் உள்ள வைக்கம் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வைக்கம் நகரில் சில இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

வைக்கம் மகாதேவ கோயில் வளாகத்தில் உள்ள ஓா் கட்டடத்தில் மேற்கூரை ஓடுகள் காற்றினால் சேதமடைந்துள்ளன. பலத்த மழை மற்றும் காற்றினால் சில வீடுகள் சேதமடைந்தன என்று அந்த அதிகாரி கூறினாா்.

ADVERTISEMENT

இதேபோல், கா்நாடகத்தில் கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது.

உடுப்பி மாவட்டத்தில் இடி விழுந்து, வீடு சேதமடைந்ததால் 20 வயது இளைஞா் உயிரிழந்தாா். பைக்கம்பாடியில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், பழங்கள் மழை நீரில் திங்கள்கிழமை காலையில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வியாபாரிகள் நஷ்டமடைந்தனா் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரளத்தின் கடலோரப் பகுதிகளில் உம்பன் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. எனவே, மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT