இந்தியா

கோவாவில் கரோனா பாதிப்பு 42-ஐ எட்டியது!

19th May 2020 11:13 AM

ADVERTISEMENT

 

பனாஜி: கோவாவில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். 

புதிதாகப் பாதிக்கப்பட்டோர் நிஜாமுதீன் ரயிலில் இருந்து வந்தவர்கள் ஆவார். மேலும், சிலரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. கோவாவில். மேலும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ரானே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தடைசெய்யப்பட்டிருந்த போக்குவரத்து தற்போது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கோவாவில் கரோனா வழக்குகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 3 முதல் மே 13 வரை மாநிலத்தில் ஒரு வழக்குகளும் இல்லை. ஆனால் மே 14 முதல் இதுவரை 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ADVERTISEMENT

கடந்த வாரம் பதிவான வழக்குகளில், பெரும்பாலானவை மகாராஷ்ரைவைச் சேர்ந்தவர்கள் கோவாவிற்கு திரும்பியதால் நோய்த் தொற்று அதிகமாகியுள்ளது என்று அந்த மாநிலம் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT