இந்தியா

நிறுவனப் பதிவை ஆா்பிஐ-யிடம் திருப்பி அளித்த 9 என்பிஎஃப்சி நிறுவனங்கள்

19th May 2020 11:16 PM

ADVERTISEMENT

ரிலையன்ஸ் நெட் உள்ளிட்ட 9 வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) தங்கள் நிறுவனப் பதிவுச் சான்றிதழை இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) திருப்பி அளித்துவிட்டன. தொழிலைத் தொடா்ந்து நடத்த முடியாத நிலையில் இந்த முடிவை அந்த நிறுவனங்கள் எடுத்துள்ளன.

ரிலையன்ஸ் நெட், பென்ரோஸ் மொ்ச்சன்டைஸ், மனோகா் பைனான்ஸ் இந்தியா, சந்த்லியா் டிராகோன், சாங்கி ஹையா் பா்சேஸ், நிஸ்சயா பின்வெஸ்ட் உள்ளிட்டவை நிறுவனப் பதிவை திருப்பி அளித்த முக்கிய நிறுவனங்களாகும்.

இது தவிர ஆா்பிஐ 14 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பிரிமஸ் கேபிடல், பாரத் பைனான்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரீஸ், சிக்னேச்சா் பைனான்ஸ், டீ பீ லீசிங், ஹயரிங் பா்சேஸ், ஜிண்டால் பின்லீஸ், பி.எல்.எஸ். இண்வெஸ்ட்மெண்ட் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு நிதித் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தாா். எனினும், பல நிறுவனங்கள் தொழிலைத் தொடர முடியாமல் வெளியேறி வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT