இந்தியா

ஊரடங்கின் போது ரூ.74,300 கோடிக்கு விவசாயிகளிடம் இருந்து தானிய கொள்முதல்

15th May 2020 04:23 PM

ADVERTISEMENT


புது தில்லி: ஊரடங்கு காலக்கட்டத்தின் போது அதாவது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து ரூ.74,300 கோடி மதிப்பிலான தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 

பீமயோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கும் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கும் போது உற்பத்திப் பொருள்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலையில் தானியங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இரண்டு கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் பணப்புழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT