இந்தியா

வீரருக்கு கரோனா: இந்திய ராணுவத் தலைமையகத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைப்பு

15th May 2020 02:34 PM

ADVERTISEMENT


புது தில்லி: வீரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, புது தில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் தலைமையகமான சேனா பவன் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு வீரருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றி வந்த வளாகத்தின் ஒரு பகுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீரருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT