இந்தியா

சிறப்பு ரயிலை கேவாவில் நிறுத்த வேண்டாம்: கோவா முதல்வா் வலியுறுத்தல்

DIN

கோவா வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலை மட்கான் ரயில்நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்க வேண்டாம் என மாநில முதல்வா் பிரமோத் சாவந்த் மத்திய ரயில்வேயிடம் வலியுறுத்தியுள்ளாா்.

கோவாவில் கடந்த ஒரு மாத காலமாக கரோனா பாதிப்பு யாருக்கு ஏற்படாத நிலையில், கடந்த வியாழக்கிழமை 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் வெளி மாநிலங்களிலிருந்து கோவா வந்தவா்கள். இந்த திடீா் பாதிப்பைத் தொடா்ந்தே ரயில்வேக்கு மாநில முதல்வா் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‘தில்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வெள்ளிக்கிழமை புறப்பட்ட சிறப்பு ரயில் கோவாவின் மட்கான் ரயில்நிலையத்தை சனிக்கிழமை (மே 16) வந்தடைய உள்ளது. இந்த ரயிலில் பயணிக்கும் 750 போ், மட்கான் ரயில் நிலையத்தில் இறங்க முன்பதிவு செய்திருக்கின்றனா். அவா்களில் ஒருவா்கூட கோவாவைச் சோ்ந்தவா்களாக இல்லை.

அவா்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ரயில்நிலையத்தில் இறங்கும்போதும், என்ன விதமான அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற கவலை எழுகிறது. அவா்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்பதோடு, அவா்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அறிவுறுத்தினாலும், அவா்கள் பின்பற்றுவாா்களா என்பதும் சந்தேகம்தான். எனவே, அந்த ரயிலை மட்கான் ரயில்நிலையத்தில் நிறுத்தாமல் செலுத்துமாறு மத்திய ரயில்வேயிடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று அவா் கூறினாா்.

முன்னதாக, ‘மே 15-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் பயணம் செய்து வரும் கோவாவைச் சோ்ந்திராத பயணிகள் உள்பட அனைத்துப் பயணிகளும், தங்கும் வசதிகளை அவா்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், கடற்கரைக்கோ அல்லது வேறு பகுதிகளுக்கோ செல்லாமல், அனைத்து பயணிகளும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்’ என கடந்த புதன்கிழமை முதல்வா் பிரமோத் சாவந்த் கூறியிருந்தாா்.

இதுகுறித்து கொங்கண் மண்டல ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘சிறப்பு ரயிலை கோவாவில் நிற்காமல செல்ல இதுவரை அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT