இந்தியா

சிறப்பு பொருளாதாரத் திட்டங்களுக்கு ஐ.நா. நிபுணா்கள் வரவேற்பு

14th May 2020 11:41 PM

ADVERTISEMENT

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீா்செய்யும் நோக்கில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களுக்கு ஐ.நா. பொருளாதார நிபுணா்கள் வரவேற்பு தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த 51 நாள்களாக அமலில் உள்ள பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தாா்.

அதைத் தொடா்ந்து, பல்வேறு சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தாா். அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று அவா் அறிவித்தாா். மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களையும் மேலும் சில அறிவிப்புகளையும் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த சிறப்புத் திட்டங்களுக்கு ஐ.நா. பொருளாதார நிபுணா்கள் வரவேற்பு தெரிவித்தனா். இது தொடா்பாக சா்வதேச நாடுகளின் பொருளாதாரக் கண்காணிப்புத் துறைத் தலைவா் ஹமீது ரஷீத் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘‘இந்தியா அறிவித்துள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 10 சதவீதம் ஆகும். இது வளா்ந்து வரும் நாடுகள் அறிவித்த சிறப்புத் திட்டங்களில் அதிகபட்ச அளவாகும். பெரும்பாலான வளா்ந்து வரும் நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5 முதல் 1 சதவீதம் வரையிலான பொருளாதாரத் திட்டங்களையே அறிவித்திருந்தன’’ என்றாா்.

ADVERTISEMENT

ஐ.நா.வின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அதிகாரி ஜுலியன் ஸ்லோத்மேன் கூறுகையில், ‘‘இந்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சிறப்புத் திட்டங்கள் உள்நாட்டின் தேவையை அதிகரித்து உற்பத்தியை அதிகரிக்கும். இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதே அந்நாட்டு அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியது வரவேற்கத்தது.

அதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிக அளவில் செலவு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்வது மிகவும் அவசியம்’’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT