இந்தியா

தற்சார்பு இந்தியா: தெருவோர வியாபாரிகள், சிறு வணிகர்களுக்கான திட்டங்கள் அறிவிப்பு

14th May 2020 04:11 PM

ADVERTISEMENT


புது தில்லி: பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று நாட்டில் உள்ள தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நேற்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பி.எஃப். சந்தா உள்ளிட்ட முதல் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இரண்டாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று வெளிமாநில தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக 9 அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மூன்று அறிவிப்புகள்.
முத்ரா வங்கிக் கடன் தொடர்பான ஒரு அறிவிப்பு.
விவசாயிகளுக்கான இரண்டு அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்றும் பிற அறிவிப்புகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தெருவோர வியாபாகளுக்கு  1 அறிவிப்பும், சிறு வியாபாரிகளுக்கு இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT