இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,452 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின்படி, பஞ்சாப் மாகாணத்தில் 13,561, சிந்து 13,341, கைபர்-பக்துன்க்வா 5,252, பலூசிஸ்தான் 2,239, இஸ்லாமாபாத் 822, கில்கிட்-பால்டிஸ்தான் 482 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 91 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 33 பேர் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 770-ஐ எட்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,452 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் மொத்த பாதிப்பு 35,788 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,695 பேர் இதுவரை முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.