கரோனாவுக்கு பிந்தையக் காலத்தில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கான உதவிகள் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்கிழமை அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி திட்டம் பற்றின இரண்டாம் கட்ட விரிவான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
இதில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கான அறிவிப்பு பற்றி அவர் வெளியிட்டிருப்பதாவது:
மார்ச் 1, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை வேளாண் துறையில் ரூ. 86,600 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு மார்ச் மாதம் ரூ. 29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற உள்கட்டமைப்புக்காக கடந்த மார்ச் மாதம் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் மாநிலங்களுக்கு ரூ. 4,200 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் மாநில அரசு நிறுவனங்களுக்கு, விவசாய உற்பத்தி கொள்முதல் மூலதனமாக ரூ. 6,700 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.