இந்தியா

கரோனா தொற்று: மகாராஷ்டிரம், தாராவி நிலவரம்

14th May 2020 08:40 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம் மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,602 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 44 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 27,524 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 1,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 6,059 பேர் குணமடைந்துள்ளனர். 20,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தாராவி:

ADVERTISEMENT

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 33 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,061 ஆக உயர்ந்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT