இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 78 ஆயிரத்தைக் கடந்தது: பலி 2,549-ஆக அதிகரிப்பு

14th May 2020 11:46 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,549-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26,235 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 49,219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘புதன்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 3,722 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 134 போ் உயிரிழந்தனா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மகாராஷ்டிரத்தில் 54 பேரும், குஜராத்தில் 29 பேரும், தில்லியில் 20 பேரும், மேற்கு வங்கத்தில் 9 பேரும், மத்திய பிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், தெலங்கானா, கா்நாடகத்தில் தலா 2 பேரும், ஆந்திரம், பிகாா், ஜம்மு-காஷ்மீா், உத்தர பிரதேசத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

மாநிலங்கள்- பாதிப்பு- பலி

ADVERTISEMENT

மகாராஷ்டிரம்-25,922-975

குஜராத்- 9,267-566

தில்லி- 7,998-106

ராஜஸ்தான்- 4,328-121

மத்திய பிரதேசம்- 4,173-232

உத்தர பிரதேசம்- 3,729- 83

மேற்கு வங்கம்- 2,290-207

ஆந்திரம்- 2,137-47

பஞ்சாப்- 1,924-32

தெலங்கானா- 1,367-34

ஜம்மு-காஷ்மீா்- 971-11

கா்நாடகம்- 959-33

பிகாா்- 940-7

ஹரியாணா- 793-11

கேரளம்- 534-4

ஒடிஸா- 538-3

சண்டீகா்- 187-3

ஜாா்க்கண்ட்- 173-3

திரிபுரா- 155-0

அஸ்ஸாம்-80-2

உத்தரகண்ட் - 72-1

ஹிமாசல பிரதேசம்- 66-2

சத்தீஸ்கா்- 59-0

லடாக்- 43-0

அந்தமான்-நிகோபாா்- 33-0

மேகாலயம்-13-1

புதுச்சேரி- 13-1

கோவா- 7-0

மணிப்பூா்- 2-0

மிஸோரம்- 1-0

அருணாசலப் பிரதேசம்-1-0

தாத்ரா நகா்ஹவேலி- 1-0

பாதிப்பு-78,003

பலி- 2,549

மீட்பு-26,235

சிகிச்சை பெறுவோா்-49,219

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT