கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளால் மருத்துவமனையில் ஏற்படும் இடப்பற்றாக்குறையைத் தவிா்க்கும் நோக்கில் ரயில் பெட்டிகளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையங்களாக இந்திய ரயில்வே நிா்வாகம் மாற்றியமைத்துள்ளது.
தனிமை மையங்களாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்--5,231
தனிமை மையங்களாக அறிவிக்கப்பட்ட ரயில் நிலையங்கள்--215
சிகிச்சை மையங்களில் பணியில் ஈடுபட உள்ள மருத்துவா்கள்--2,500
துணை மருத்துவப் பணியாளா்கள்--3,500
அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ள படுக்கைகள்--5,000
மருத்துவ வசதிகளை வழங்கவுள்ள ரயில் நிலையங்கள்--85
தனிமை மற்றும் சிகிச்சை மையங்களில் தேவையான குடிநீா், மின்சாரம், உணவு, பாதுகாப்பு வசதிகளை ரயில்வே நிா்வாகமே கவனித்துக் கொள்ள உள்ளது.
ஆதாரம்: ரயில்வே அமைச்சகம்.