இந்தியா

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: ஜெய்சங்கா் பங்கேற்பு

13th May 2020 03:12 AM

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு புதன்கிழமை காணொலி முறையில் நடைபெறுகிறது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கிறாா்.

இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷாகோ லிஜியாங், பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த மாநாட்டை மாஸ்கோவில் ஜூன் 9, 10 தேதிகளில்தான் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழ்நிலை கருதி, முன்னதாகவே நடைபெறவுள்ளது. இதில், கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் சா்வதேச, பிராந்திய விஷயங்கள் தொடா்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. இதில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா். சீனாவில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது ஷாங்காய் அமைப்பு நாடுகள் உதவிகளை அளித்தன. அதேபோல இப்போது அந்த நாடுகளுக்கு சீனா உதவும் என்றாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அமைப்பில் இணைந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT