இந்தியா

டி.டி.எஸ். வரிப் பிடித்தம் 25% குறைப்பு; வருமான வரி தாக்கலுக்கு 3 மாத அவகாசம்

13th May 2020 05:31 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்  மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வருமான வரிக் கணக்குத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 15 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதில், டிடிஎஸ் வரி பிடித்தம் குறைப்பு மற்றும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது பற்றி அவர் அறிவித்திருப்பதாவது, டிடிஎஸ் வரிப் பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 25% ஆகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் ரூ. 50 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கம் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிடித்தம் குறைப்பு நாளை முதலே அமலுக்கு வருகிறது.

மேலும் வருமான வரிக் கணக்குத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை சுமார் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : TDS ITreturn
ADVERTISEMENT
ADVERTISEMENT