இந்தியா

ரயில்வே, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் பணி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

13th May 2020 05:22 PM

ADVERTISEMENT

 

ரயில்வே, சாலைப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கால அளவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 15 முக்கிய சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். 

அதில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே, சாலைப் போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கால அளவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. கட்டுமானத் தொழில், சரக்கு மற்றும் சேவைகள் துறை உள்பட அரசு மற்றும் தனியார் கூட்டமைப்புடன் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். அதன்படி, ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதமும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT