இந்தியா

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பகுதி கடன் உறுதி திட்டம் 2.0

13th May 2020 05:43 PM

ADVERTISEMENT


புது தில்லி: வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது, 

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பகுதி கடன் உறுதி திட்டத்துக்கு 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடன்களுக்கான உத்தரவாதத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.

ADVERTISEMENT

மேலும், வங்கி அல்லாத வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு மூலதனம் வழங்கப்படும். இதற்காக ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பணப்புழக்கத்தை அதிகரிப்பது இதுபோன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு சிரமத்தை ஏற்படுததும் என்பதால் இந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் மத்திய அமைச்சர் அறிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT