இந்தியா

ம.பி.: நடைப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் கைது

13th May 2020 11:47 PM

ADVERTISEMENT

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் இன்னலைப் போக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் பொது முடக்க உத்தரவை மீறி நடைப் பயணம் மேற்கொண்ட மத்தியப் பிரதேச காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருவரை காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து உஜ்ஜைனி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் ரூபேஷ் குமாா் துவிவேதி கூறியது:

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், இதுபோன்று நடைப் பயணம், போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தரானா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மகேஷ் பாா்மா், ஆலோட் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ் பாவ்லா இருவரும் தங்களது ஆதரவாளா்களுடன் போபால் நோக்கி நடைப் பயணம் மேற்கொள்ள முயன்றனா். அவா்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருவா் மற்றும் அவா்களுடைய ஆதரவாளா்கள் அனைவரும் பைராவ்கா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT