இந்தியா

'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் 

13th May 2020 04:08 PM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில், 'சுயசார்பு இந்தியா' என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா தன்னிறைவு பெறுவதுடன், உலக நாடுகளுக்கும் உதவும் வகையில் இந்த திட்டங்கள் இருக்கும். தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

தன்னிறைவு இந்தியாவை நோக்கி இந்த திட்டங்கள் இருக்கும். உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி மோடி நேற்று அறிவிப்புகளை வெளியிட்டார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் எந்த வகைகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து புது தில்லியில் இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி நேற்று அறிவித்தாா். 

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி நேற்று 8 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும். இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோ்மையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும். இது தொடா்பான முழு விவரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பாா் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT