ரியல் எஸ்டேட் கட்டுமானப் பணிகள் பதிவுத் தேதி மற்றும் நிறைவடையும் தேதிக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நேற்றிரவு அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு மூலம் விளக்கினார். அதில் ரியல் எஸ்டேட் துறைக்கான அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.
ரியல் எஸ்டேட்:
மார்ச் 25, 2020 அல்லது அதற்குப் பிந்தைய தேதிகளில் காலாவதியாகும் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்டுமான திட்டங்களின் பதிவு மற்றும் நிறைவடையும் தேதி 6 மாதங்களுக்கு தாமாகவே நீட்டிக்கப்படும். இதற்காக தனித்தனி விண்ணப்பங்கள் கோரப்படாது.
இந்த கால அவகாசத்தை ஒழுங்குமுறை ஆணையங்கள் தேவைப்பட்டால் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
புதிய அவகாசத்துடன் புதிதாக திட்டப் பதிவு சான்றிதழை வழங்கிட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பிரச்னையைக் குறைத்து, கட்டுமான திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்யும். இதன்மூலம், வீடு வாங்குபவர்கள், பதிவு செய்த வீடுகளை புதிய கால அவகாசத்தில் வாங்க முடியும்.