இந்தியா

கரோனா பாதிப்பு: பிகார், ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகம், சண்டீகர் நிலவரம்

13th May 2020 02:02 PM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

பிகார்: 

பிகாரில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஒடிசா:

ஒடிசாவில் மேலும் 101 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. இதில் 419 பேர் சிகிச்சையில் உள்ளனர், 116 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 4,213 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 117 ஆகவும் உள்ளது. 

கர்நாடகம்

கர்நாடகத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 951 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 32 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 442 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சண்டீகர்:

சண்டீகரில் இன்று மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 181 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT