இந்தியா

சிஐஎஸ்எஃப் அதிகாரி கரோனாவுக்கு பலி

13th May 2020 05:56 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவா் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தாா்.

கொல்கத்தா போா்க்கப்பல் கட்டுமான தளத்தில் சிஐஎஸ்எஃப் உதவி சாா்-ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜாரு பா்மன் (55) திங்கள்கிழமை கரோனா தொற்றால் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை துணை ராணுவப்படையைச் சோ்ந்த 6 போ் இந்நோய்த்தொற்றுக்கு பலியானதாகவும், செவ்வாய்க்கிழமை மட்டும் 18 வீரா்களுக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய ஆயுத காவல்படை (சிஏபிஎஃப்) உள்ளிட்ட துணை ராணுவப் படைகளில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 779-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT