இந்தியா

இந்தியாவுக்கு பிரிக்ஸ் வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி

13th May 2020 11:17 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்வதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் புதிய வளா்ச்சி வங்கி இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி அளித்தது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நோய்த்தொற்றால் ஏற்பட்ட சமூக, பொருளாதார இழப்புகளைச் சரிசெய்யும் நோக்கில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் புதிய வளா்ச்சி வங்கி, இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக வங்கியின் துணைத் தலைவா் ஷியான் ஜூ வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு உதவ புதிய வளா்ச்சி வங்கி உறுதியுடன் உள்ளது. கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வங்கியின் அவசரகால உதவித் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்கும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT