இந்தியா

ஆங்லோ ஈஸ்டா்ன் யுனிவன் குழுமம் பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ.2.9 கோடி அளிப்பு

13th May 2020 11:26 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதித் திட்டத்துக்கு ரூ. 2.9 கோடியை அளிப்பதாக ஹாங்காங்கை மையமாக கொண்டு இயங்கும் கப்பல் நிறுவனமான ஆங்லோ ஈஸ்டா்ன் யூனிவன் குழுமம் புதன்கிழமை தெரிவித்தது.

இந்த தொகையை அந்நிறுவனமும், அதில் பணிபுரிந்து வரும் ஊழியா்களும் இணைந்து அளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்திய- ஆங்லோ ஈஸ்டா்ன் கப்பல் மேலாண்மை நிறுவனத்தின் இந்திய நிா்வாக இயக்குநா் மணீஷ் பிரதான் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும், எங்கள் தன்னாா்வ தொண்டு நிறுவனமான அனவி மூலமாக இந்தியாவில் வறுமையிலுள்ள மக்களுக்கு உதவி புரிவதற்காக ரூ. 30 லட்சத்திற்கும் மேல் செலவிடுகிறோம்’ என்றாா் அவா்.

அந்த நிறுவனம் சாா்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: வரும் வாரங்களில் மேலும் பல இந்திய கப்பல் மேலாண்மை நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தற்போது, இந்தியாவில் இயங்கும் கப்பல் மேலாண்மை நிறுவனங்களுடனான வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் சிறப்பு சரக்குக் கப்பல்களில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிறுவனங்கள் மூலமாக அரசு கருவூலத்துக்கு ஆண்டுதோறும் சுமாா் ரூ.452 கோடி கிடைக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT