இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 858 ஆக உயர்வு

11th May 2020 03:24 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கர்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 858 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை திங்களன்று தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். 422 பேர் குணமடைந்து நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 67,152 ஆக உயர்ந்துள்ளது. 20,917 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தற்போது, இந்தியாவில் 44,029 பேர் கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2,206 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT