இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் புதிதாக பாதிப்பில்லை: ஹர்ஷ வர்தன்

10th May 2020 09:14 PM

ADVERTISEMENT


கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கோவிட் சேவை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு ஹர்ஷ வர்தன் தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றார். மேலும், நாடு முழுவதும் 4,362 கோவிட் சேவை மையங்கள் இருப்பதாகவும், அங்கு லேசான அல்லது மிகவும் லேசான அறிகுறி உள்ள 3,46,856 பேர் அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 62,939 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 19,358 பேர் குணமடைந்துள்ளனர், 2,109 பேர் பலியாகியுள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT