நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு 3ஆவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாட்டில் கரோனா வைரஸ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் இந்த எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதனால் நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூன் மாதம் தொடங்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனினும், அந்த நேரத்தில் சூழ்நிலையை பொருத்து முடிவெடுக்கப்படும் என்றார்.