இந்தியா

தில்லியில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.4 ஆகப் பதிவு

10th May 2020 03:54 PM

ADVERTISEMENT

 

தில்லி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு தில்லி, தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 2.7, 3.4 என பதிவாகியுள்ளது.

ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தில்லி- உ.பி. எல்லைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.

ADVERTISEMENT

கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT