இந்தியா

அன்னையர் தினத்தை முன்னிட்டு கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்!

10th May 2020 02:49 PM

ADVERTISEMENT

 

சிறப்பு தினத்தன்று கூகுள் நிறுவனம் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூகுள் பயனர்கள், இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தங்கள் அன்னைக்கு ஒரு சிறப்பு டிஜிட்டல் வாழ்த்து செய்தியை அனுப்ப கூகுள் ஏற்பாடு செய்துள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி, கூகுள் பக்கத்தில் உள்ள 'கூகுள்' என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு தனி பக்கம் உருவாகும். அதில், இதயம், பூக்கள் போன்ற வித்தியாசமான நிறைய வடிவமைப்பைகள் இருக்கும். அதில் தேவையானவற்றை தேர்வு செய்து ஒரு புதிய டிஜிட்டல் கார்டை உருவாக்கலாம். பின்னர், வலது ஓரத்தில் உள்ள 'send' பகுதியை அழுத்தினால் முகநூல் பக்கம், ட்விட்டர், இமெயில் மூலமாக அனுப்பலாம். இது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Tags : mothers day
ADVERTISEMENT
ADVERTISEMENT