இந்தியா

நிலக்கரி உற்பத்தி சாதனை அளவை எட்டும்: மத்திய அரசு நம்பிக்கை

10th May 2020 10:51 PM

ADVERTISEMENT

நாட்டின் நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 70 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி துறை செயலா் அனில் ஜெயின் கூறியதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019-20 நிதியாண்டில் இந்தியா 60.21 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் அளவான 60.6 கோடி டன்னைக் காட்டிலும் சிறிதளவு குறைவாகும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் சிறிய சரிவு காணப்பட்ட போதிலும், நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் நிலக்ககரி உற்பத்தியானது 70 கோடி டன் சாதனை அளவைத் தொடும். இந்த சாதனை உற்பத்தி நிலக்கரி இறக்குமதியை கணிசமாக குறைக்க உதவும்.

ADVERTISEMENT

இந்தியா ஆண்டுக்கு 23.5 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இவற்றில் பாதி மின் உற்பத்தி ஆலைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அதனை மாற்றியமைக்க முடியாது. ஆனால், எஞ்சியுள்ள பகுதியை நாம் தாரளமாகக் குறைக்க முடியும் என்றாா் அவா்.

இறக்குமதி குறைப்பு குறிக்கோளை எட்ட, கோல் இந்தியா நிறுவனம் வரும் 2024-ஆம் நிதியாண்டுக்குள் தனது ஆண்டு நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT