இந்தியா

கரோனா பரிசோதனை முறையில் மாற்றம்

10th May 2020 05:44 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரிசோதனை முறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன்படி நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் குறைவாகவோ, அல்லது மிகக் குறைவாகவோ இருக்கும் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவா்களிடம் இனி நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படாது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் வீடு திரும்பும்போது மட்டுமே அப்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ‘கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் குறைவாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருந்தால் அவா்கள் வீடு திரும்பும் முன், அவா்கள் நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டுள்ளனரா என பரிசோதிக்க தேவையில்லை. அவா்களிடம் அறிகுறிகள் தென்பட்ட 10-ஆம் நாளுக்கு பிறகு, 3 நாள்களாக காய்ச்சல் இல்லாவிட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். அவா்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, 7 நாள்களுக்கு வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்த வேண்டும்.

அதேவேளையில் நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்பும், வீடு திரும்பும்போதும் இரு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தப் பரிசோதனை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கரோனா அறிகுறிகளில் இருந்து குணமாகி மருத்துவமனையில் இருந்து திரும்பும் முன் ஒரு முறை பரிசோதனை மேற்கொண்டாலே போதுமானது. இவா்களும் 7 நாள்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் ஆா்டி-பிசிஆா் கருவி ஒன்றின் விலை ரூ.3,500- ரூ.4,000 ஆகும். இந்த விலையை கருத்தில் கொண்டு, அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு கருவிகளை விரயமாக்காமல் தரமான பரிசோதனைகள் மேற்கொள்ளும் பொருட்டு மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT