இந்தியா

தாராவியில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 859 ஆக உயர்வு

10th May 2020 06:18 PM

ADVERTISEMENT

 

தாராவியில் இன்று புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 29 ஆக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 222 பேர் குணமடைந்துள்ளனர். 

பிரிகான் மும்பை மாநகராட்சி மேற்குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : dharavi
ADVERTISEMENT
ADVERTISEMENT