இந்தியா

ஆந்திரத்தில் எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

9th May 2020 07:33 PM

ADVERTISEMENT


எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி இறந்தவர்களின் சடலங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் அருகே உள்ள எல்.ஜி. பாலிமா்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஸ்டைரீன் நச்சுவாயு கசிவால் 12 போ் உயிரிழந்தனா். நச்சுவாயுவால் 1,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இச்சம்பத்தில் 32 விலங்குகளும் பலியாகின. 199 விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையை அகற்றக்கோரி அதன் முன்பாக இறந்தவர்களின் சடலங்களுடன் பொதுமக்கள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தொழிற்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT