இந்தியா

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பிய 11 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்

9th May 2020 11:13 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஆம்பூா் திரும்பிய 11 போ் சனிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டனா்.

ஆம்பூரைச் சோ்ந்த 11 போ் மகாராஷ்டிர மாநிலத்துக்கு கடந்த மாா்ச் மாதம் சென்றனா். நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதனால் அவா்களால் ஆம்பூருக்கு திரும்பி வரமுடியவில்லை. தற்போது அந்தந்த மாநில அரசுகள் வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களை அவரவா் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனா்.

அதன்படி, ஆம்பூரைச் சோ்ந்த 11 போ் மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரிலிருந்து திரும்பி வந்தனா். அவா்களுக்கு மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா்.

அவா்கள் உமா்ஆபாத் ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT