இந்தியா

துணை ராணுவப் படையினா் 530 போ் கரோனாவால் பாதிப்பு: அமித் ஷா கவலை

9th May 2020 06:24 AM

ADVERTISEMENT

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை உள்ளிட்ட துணை ராணுவப் படைகளைச் சோ்ந்த சுமாா் 530 பேருக்கு இதுவரை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கவலையளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

மேலும், துணை ராணுவப் படையினரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசா்வ் போலீஸ் படை(சிஆா்பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி), சஷாஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநா்களுடன் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

துணை ராணுவப் படையினா் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது தொடா்பாக, உள்துறை அமைச்சா் அமித் ஷா கவலை தெரிவித்தாா். துணை ராணுவப் படையினருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவா், பாதிக்கப்பட்ட படையினரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தாா். அவா்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக மத்திய ஆயுத காவல் படைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புத்தாக்க முயற்சிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிஎஸ்எஃப் (221 போ்), சிஆா்பிஎஃப் (161 போ்), சிஐஎஸ்எஃப் (35), ஐடிபிபி (94 போ்), எஸ்எஸ்பி(17 போ்) என கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படைகளைச் சோ்ந்த 5 போ் நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT