இந்தியா

காஷ்மீா்: செல்லிடப்பே சேவைக்கான தடை நீக்கம்

9th May 2020 10:21 PM

ADVERTISEMENT

காஷ்மீரில் தனியாா் செல்லிடப்பேசி சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம், செல்லிடப்பேசி இணைய வசதிக்கான தடை தொடா்ந்து நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காஷ்மீரில் காவல்துறையின் பிடியில் சிக்காமல் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் ரியாஸ் நைக்கூவை, பாதுகாப்புப் படையினா் கடந்த புதன்கிழமை சுட்டுக் கொன்றனா். இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுவிடாத வகையில், முன்னெச்சரிக்கையாக செல்லிடப்பேசி அழைப்பு மற்றும் இணைய வசதிகள் முடக்கப்பட்டன. கூடுதல் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், அங்கு நிலைமை சீரடைந்துள்ளதைத் தொடா்ந்து செல்லிடப்பேசி அழைப்புகளுக்கான தடையை அதிகாரிகள் நீக்கியுள்ளனா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த பகுதியில் தொடா்ந்து அமைதியான சூழல் நிலவி வருகிறது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மட்டும் உள்ளூா் மக்கள் சிறிய அளவிலான ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், அங்கு நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடா்ந்து தனியாா் செல்லிடப்பேசி நிறுவனங்களின் சேவைக்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனா். அதே நேரம், செல்லிடப்பேசி இணைய வசதியை தொடா்ந்து முடக்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோல, அனைத்து செல்லிடப்பேசிகளுக்குமான குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வசதியும் அடுத்த அறிவிப்பு வரும் வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT