இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு 59,662 ஆக உயர்வு; இதுவரை 1,981 பேர் பலி

9th May 2020 10:57 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 95 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சனிக்கிழமை காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. இவர்கரிளல் 17,847 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 1,981 பேர் பலியாகியுள்ளனர். 39,834 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,981 ஆக அதிகரித்துள்ளது. 39,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 17,847 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 19,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 731 பேர் பலியாகி உள்ளனர், 3,470 பேர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத்தில் இதுவரை 7,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 449 பேர் உயிரிழந்துள்ளனர், 1,872 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT

தேசிய தலைநகர் தில்லியில் 6,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 2,020 பேர் குணமடைந்துள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 6,009 பேர்,  ராஜஸ்தானில் 3,579 பேர், மத்தியப் பிரதேசத்தில் 3,341 பேர், உத்தரப் பிரதேசத்தில் 3,214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT