இந்தியா

கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

9th May 2020 10:16 PM

ADVERTISEMENT


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பிற மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று மட்டும் 1,165 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 20,228 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா:

ADVERTISEMENT

தெலங்கானாவில் புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,163 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் புதிதாக 129 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,708 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 106 பேர் பலியாகியுள்ளனர். 1,440 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் இன்று புதிதாக 116 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,457 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,480 பேர் குணமடைந்துள்ளனர், 211 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,797 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,091 பேர் குணமடைந்துள்ளனர், 472 பேர் பலியாகியுள்ளனர்.

ஹரியாணா:

ஹரியாணாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 675 ஆக உயர்ந்துள்ளது. இதில் 290 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர். 376 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 108 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,786 ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாபில் இன்று 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,762 ஆக உயர்ந்துள்ளது. 1,574 பேர் சிகிச்சையில் உள்ளனர், 31 பேர் பலியாகியுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT