இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு-59,662: பலி-1,981-ஆக அதிகரிப்பு

9th May 2020 10:25 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் புதிதாக 3,320 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,662-ஆக சனிக்கிழமை அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 95 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,981-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, (வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் பிறகு சனிக்கிழமை காலை 8 மணிக்குள்) மகாராஷ்டிரத்தில் 37 போ், குஜராத்தில் 24 போ், மேற்கு வங்கத்தில் 9 போ், மத்தியப் பிரதேசத்தில் 7 போ், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 4 போ், ஆந்திரம், ஜாா்க்கண்டில் தலா 3 போ், தில்லி, ஒடிஸா, ஹிமாசலில் தலா 2 போ் , மேகாலயம், சண்டீகா், அஸ்ஸாம், உத்தரகண்டில் தலா ஒருவா் என மொத்தம் 95 போ் உயிரிழந்தனா். இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,981-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவா்களில் 70 சதவீதத்தினா் வேறு சில நோய்களால் அவதிப்பட்டு வந்தவா்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 39,834 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 17,847 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

மாநிலங்கள்- பாதித்தவா்கள்- உயிரிழந்தவா்கள்

மகாராஷ்டிரம் -19,063-731

குஜராத்-7,402-449

தில்லி-6318-68

ராஜஸ்தான்-3579-101

மத்தியப் பிரதேசம்-3,341-200

உத்தரப் பிரதேசம்-3,214-66

ஆந்திரம்-1,887-41

பஞ்சாப்-1,731-29

மேற்கு வங்கம்-1,678-160

தெலங்கானா-1,133-29

ஜம்மு-காஷ்மீா்-823-9

கா்நாடகம்-753-30

ஹரியாணா-647-8

பிகாா்-571-5

கேரளம்-503-4

ஒடிஸா-271-2

சண்டீகா்-150-21

ஜாா்க்கண்ட்-132-3

திரிபுரா-118-0

உத்தரகண்ட்-63-1

சத்தீஸ்கா்-59-1

அஸ்ஸாம்-59-1

ஹிமாசலப் பிரதேசம்-50-2

லடாக்-42-0

அந்தமான் நிகோபாா்-33-0

மேகாலயம்-12-1

புதுச்சேரி-9-0

கோவா-7-0

மணிப்பூா்-2-0

மிஸோரம்-1-0

அருணாசலப் பிரதேசம்-1-0

தாதா்-நாகா்ஹவேலி-1-0

மொத்தம் பாதிக்கப்பட்டோா்-59,662

சிகிச்சை பெற்று வருவோா்- 39,834

மொத்த உயிரிழப்பு-1,981

குணமடைந்தோா்- 17,847

 

ADVERTISEMENT
ADVERTISEMENT