இந்தியா

பொது முடக்க காலத்தில் தொழில் நிறுவனங்களுக்குரூ.42,000 கோடி வங்கிக் கடன்

9th May 2020 06:04 AM

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலமாக இதுவரை ரூ.42,000 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்போதிருந்து, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, இதுவரை ரூ.27,426 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரு நிறுவனங்களுக்கு ரூ.14,735 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனுதவியை 10 லட்சம் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களும், 6,428 பெரு நிறுவனங்களும் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதுமட்டுமன்றி, ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, இந்த நிறுவனங்கள் கடன் தவணையை 3 மாதங்களுக்குப் பிறகு திருப்பிச் செலுத்துவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘இதுவரை 3.2 கோடி வாடிக்கையாளா்கள், கடன் தவணையை 3 மாதங்கள் கழித்து திருப்பிச் செலுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT