இந்தியா

ஒடிசாவில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 287

9th May 2020 11:07 AM

ADVERTISEMENT

 

புவனேஸ்வர்: ஒடிசாவில் சனிக்கிழமை மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ள என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. 

கஞ்சம் மாவட்டத்தில் 12 பேருக்குப் புதிதாகத் தொற்றும், மயூர்பஞ்சில் மூன்று பேருக்கும், பத்ராக் மற்றும் சுந்தர்கர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கும் வைரஸ் பரவியுள்ளது. 

கஞ்சம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்தது. பத்ரக்கில் 25 ஆகவும், சுந்தர்கரில் மொத்தம் 13 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தற்போது, ​​மாநிலத்தில் 222 சிகிச்சையில் உள்ளனர். 63 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். புவனேஸ்வரில் இருந்து இரண்டு பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் தற்போது 298 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மட்டும் 3,348 பேருக்குச் சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவில் இதுவரை 56,322 இரத்த மாதிரிகள் பரிசோதித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

எட்டு நாட்களில் கஞ்சத்தில் 83 வழக்குகள் பதிவாகியுள்ளன. கஞ்சாமில் இருந்து பதிவான வழக்குகள் அனைத்தும் பெரும்பாலானவை சூரத்திலிருந்து திரும்பியவர்கள் ஆவார்.  

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT